News February 10, 2025
ODIல் அதிக சதம் அடித்த வீரர்கள் இவர்கள் தான்

ODI கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி (50) முதலிடத்தில் நீடிக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (49) 2வது இடத்திலும், ரோகித் ஷர்மா (32) 3வது இடத்திலும் உள்ளனர். ரிக்கி பாண்டிங் (30), ஜெயசூர்யா (28), ஆம்லா (27), ஏபி டி வில்லியர்ஸ் (25), கிறிஸ் கெய்ல் (25) ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டாப்-3ல் உள்ள மூவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 6, 2026
ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை வெளியிடவுள்ளேன்: CM

1967-ல் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, TN-ன் எழுச்சிக்கு விதையூன்றிய நாள் இன்று என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த நாளில் அடுத்த 5 ஆண்டுகளின் வளர்ச்சிக்கான ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்டை அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கு இன்று புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
மகளிருக்கு.. ஸ்டாலின் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

திராவிட மாடல் 2.0-வில், புதிய அறிவிப்புகளை துறைவாரியாக இன்று வெளியிடவுள்ளதாக CM அறிவித்துள்ளார். ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தில் பெறப்பட்ட மக்களின் யோசனைகளை தொகுத்து, அதில் நிறைவேற்ற வாய்ப்புள்ளவற்றை அவர் அறிவிக்கவுள்ளார். இதில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது முதல் வரவு வைக்கப்படும், ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை இன்ப அதிர்ச்சியாக CM வெளியிடலாம் என கூறப்படுகிறது.
News March 6, 2026
லஞ்ச வழக்கில் சிக்கிய திமுக MLA? வீடியோ ஆதாரத்துடன் ED

அமைச்சர் நேருவுக்கு எதிரான ED அறிக்கையில் பாளையங்கோட்டை திமுக MLA அப்துல் வஹாப்பின் பெயரும் அடிபடுவதால் அறிவாலயத்தை புது புயல் ஆட்டிப்பார்க்க தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது. ED அறிக்கையில், CM பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டுவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ₹1 லட்சத்தை MLA வசூலித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம். இதற்கு வீடியோ ஆதாரங்களும் இருக்கிறது என்கின்றனர்.


