News April 14, 2025
இவர்களுக்குத்தான் சம்பளம் அதிகமாம்.. எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லி முதலிடத்தில் உள்ளார். அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அவருக்கு ₹110 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், ஒரு படத்தை இயக்க ₹60- 70 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ₹55- 60 கோடிகளுடன் ஷங்கர் 3ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநராக ராஜமௌலி (₹200 கோடி) உள்ளார்.
Similar News
News January 21, 2026
BREAKING: தவெக கூட்டணி.. புதிய அறிவிப்பு

திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து கூட்டணியை உறுதி செய்து வரும் நிலையில், தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், 2026-ல் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பதை விரைவில் விஜய் தெரிவிப்பார் என்று செங்கோட்டையன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், எத்தனை கூட்டணி அமைந்தாலும் விஜய்தான் 2026 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
நடிகர் கமல் ராய் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

நடிகை ஊர்வசியின் சகோதரரும் நடிகருமான <<18917555>>கமல் ராய்<<>> இன்று காலமானார். சென்னையில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரை அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமாதான். கமல் ராயின் மறைவு சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு மலையாள இயக்குநர் வினயன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கமல் ராயின் இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. RIP
News January 21, 2026
மோடி சென்னைக்கு வரும் டைம் இதுதான்

ஜன.23-ம் தேதி NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் PM மோடியின் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 23-ம் தேதி மதியம் 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் 2.50-க்கு மதுராந்தகம் வந்தடைகிறார். அதன்பின், 3 மணி முதல் 4.15 வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 5 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.


