News January 31, 2025
உலகிலேயே மிகவும் அழகான நாடுகள் இவை தான்!

உலக மக்களை கவர்ந்த உலகின் மிகவும் அழகான நாடுகளின் பட்டியலை Rough Guides தளம் வெளியிட்டுள்ளது. அதில், நியூசிலாந்து உலகின் மிக அழகான நாடாக முதல் இடத்தில் இருக்கிறது. அந்நாட்டின் கலாசாரத்தில் காணப்படும் இயற்கைக்காட்சி மனதை மயக்கும் என பலர் வர்ணிக்கிறார்கள். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் இத்தாலி, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை உள்ளன. இதில், இந்தியாவிற்கு 16வது இடம் கிடைத்துள்ளது.
Similar News
News March 7, 2026
BIG NEWS: தமிழகத்தை உலுக்கிய ரேப் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், தவசி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.
News March 7, 2026
சுயதொழில் தொடங்க லோன் வேண்டுமா? இதோ திட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க https://nsfdc.nic.in/channel-patrners/scas என்ற இணையதளத்தை பார்வையிடவும். உங்க வீட்டு பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 7, 2026
BREAKING: மகளிருக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்

மானிய விலையில் நாப்கின் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மானிய விலை அல்லது இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிடக்கோரி லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என நம்புவதாக கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.


