News October 5, 2025
பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடல் அழகி அரோரா சின்க்ளேர், குக் வித் கோமாளி புகழ் கனி, VJ பார்வதி, துஷார், சபரி நாதன் மற்றும் FJ உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இன்னும் யாரெல்லாம் இருப்பாங்கன்னு guess பண்ணுங்க..!
Similar News
News October 6, 2025
ராசி பலன்கள் (06.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 6, 2025
PoK-ஐ திரும்ப எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்

ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு வீடு; ஆனால், சிலர் வீட்டில் இருந்த ஒரு அறையை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஆக்கிரமித்துள்ளதாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ம.பி.,யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாங்கள் திரும்ப எடுத்துக் கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிளவுபடாத இந்தியாவை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 6, 2025
சிறந்த கருத்தடை முறை எது தெரியுமா?

கருத்தடை முறைகளின் பாதுகாப்பு, எந்த அளவுக்கு அவற்றை சரியாக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அமையும். பாதுகாப்பு முறைகளை 100% கடைப்பிடித்தால் ஆணுறை 98% வெற்றிகரமாக கர்ப்பத்தை தடுக்கிறது. சாதாரணமாக பயன்படுத்தும் போது, 82% அளவுக்கே கர்ப்பத்தை தடுக்கிறது. பெண்கள் பயன்படுத்தும் காப்பர்-டி -99%, கருத்தடை மாத்திரை -99% (ஓரிரு நாள் தவறினால் 91%), கருத்தடை அறுவை சிகிச்சை -98% கர்ப்பத்தை தடுக்கிறது.