News August 9, 2025
2026 T20 WC வரை இவர்கள்தான் ஆஸி., ஓபனிங் பேட்ஸ்மென்கள்

2026 டி20 உலகக்கோப்பை வரை மிட்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தான் தங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மென்கள் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடி இன்னும் டி20 -களில் ஓபனிங் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாங்கள் கெத்து என நிரூபித்துள்ளது. வெறும் 5 இன்னிங்ஸ்களில் 70.50 சராசரியுடன் 282 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி அடித்துள்ளது.
Similar News
News August 9, 2025
அதிகாலை தியானத்தின் அபார பலன்கள்!

அமைதியான அதிகாலை வேளையில், தியானம் செய்வது பல நல்ல நன்மைகளை அளிக்கும்
◆தினமும் தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கத்தையும் மேம்படுத்துகிறது.
◆எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
◆மன அழுத்தம் குறைகிறது.
◆செய்யும் வேலையில் கவனம் கூடுகிறது.
◆செரடோனின் & டோபமைன் போன்ற உணர்வுமிகுந்த ஹார்மோன்கள் வெளியேற உதவுகிறது. SHARE IT.
News August 9, 2025
திமுக உறுப்பினர் சேர்க்கை நீட்டிப்பு? 13ல் ஸ்டாலின் முடிவு

ஆக.13-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது OTP பெறக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 13-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
News August 9, 2025
கழிவறையில் செல்போன் யூஸ் செய்வதால் மூலநோய் வரலாம்!

டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுமாம். அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால், ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு ரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். ஜாக்கிரதை..! SHARE IT.