News September 24, 2025
திருமண வாழ்க்கை நீடிக்க இந்த 5 விஷயங்கள் போதும்

*தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
*இருவருக்குமிடையேயான காதல் மட்டும் மகிழ்ச்சியை கொடுத்திராது, உங்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
*கருத்து மோதல்கள் அதிகமாக இருப்பின், தேவையான உளவியல் ஆலோசனைகளை பெறுங்கள்.
*உங்கள் துணையாரிடம் நேர்மையாக பேசுங்கள். *துணையிடம் சொல்ல முடியாத சில விஷயங்களை பகிர, ஒரு நல்ல நண்பரையும் வைத்துக்கொள்ளுங்கள்.
Similar News
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.
News September 24, 2025
USA கிரிக்கெட் சங்கத்தை இடைநீக்கம் செய்தது ICC

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசியின் சட்ட திட்டங்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முறையான நிர்வாகம் அமைக்கவில்லை, ஒலிம்பிக் அங்கீகாரம் பெறவில்லை, விதிகளை மீறிய செயல்பாடுகள் உள்ளிட்டவையை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஐசிசி போட்டிகளில் அமெரிக்காவால் பங்கேற்க முடியாது.