News April 29, 2025
இன்னும் நிறைய இருக்கு சாம்பியன்: யூசுஃப் பதான்

IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.
Similar News
News April 29, 2025
கஞ்சனூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ்(22). நேற்று அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை. அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கஞ்சனுார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
காலையில் தியானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

காலையில் விழிப்பதே நிறைய பேருக்கு பிரச்னை. அப்படி விழித்து தியானம் செய்தால் பல நன்மைகள் கிடைக்குமாம். மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை கட்டுப்படுத்த தியானம் உதவுகிறது. விழிப்புணர்வு திறனை மேம்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்துகிறது. நினைவக இழப்பின் அபாயத்தை தியானம் குறைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT
News April 29, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.