News February 17, 2025
கோடையில் கரன்ட் கட் ஆகாது… மின்வாரியம் நடவடிக்கை

வெயில் காலத்தில் மாநிலத்தின் மின்சாரத் தேவை 22,000 MW ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, 8,525 MW மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை TANGEDCO தொடங்கவுள்ளது. இதன்மூலம், வீடுகளுக்கு கோடையில் மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News December 8, 2025
பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிஆர்ஓ!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில், பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கினார்.
News December 8, 2025
இந்திய அணிக்கு 10% அபராதம் விதித்த ICC

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதில் 2-வது போட்டியில் இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், ICC அபராதம் விதித்துள்ளது. போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SA இடையேயான டி20 தொடர் நாளை கட்டாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-ல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இன்று கடலூர் பக்தர் சுந்தர்(66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!


