News February 16, 2025

அமெரிக்காவில் இனி நாணயங்கள் இருக்காது

image

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், நாணய தயாரிப்பை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு சென்ட் நாணயத்தை தயாரிக்க 4 சென்ட் வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால், அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் 737 கோடி இழப்பு என்பதால் இந்த முடிவாம். தவிர, சில்லறையை எண்ணி சரிபார்ப்பதால் ஏற்படும் 2.5 விநாடிகள் நேர விரயமும் மிச்சமாகுமாம்.

Similar News

News December 10, 2025

ஓஷோ பொன்மொழிகள்

image

*நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை. *உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள். *இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது. *உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்கள் ஒரே ஆசிரியர். *அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி. மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.

News December 10, 2025

டிரம்ப்பை சீண்டியதால் இந்தியா மீது வரி: ரகுராம்

image

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமில்லை என்று கூறியதே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரிவிதிக்க காரணம் என RBI EX கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கூற்று டிரம்ப்பின் ஈகோவை சீண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. டிரம்ப்பால் தான் போர் நின்றது என்று துதிபாடியதால், அமெரிக்கா 16% வரியோடு நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் ஆனது எப்படி?

image

இந்திய குடியுரிமையை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சோனியா காந்திக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1983-ல் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக விகாஷ் திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!