News August 7, 2024
அணுகுமுறையில் மாற்றம் இருக்கும்: வாஷிங்டன் சுந்தர்

SL அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டுமென தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “SL-க்கு எதிரான ODI தொடரின் 3ஆவது போட்டியில், IND அணியின் அணுகுமுறையில் சிறிய மாற்றம் இருக்கும். வெற்றியை இலக்கு வைத்து நம்பிக்கையுடன் விளையாட உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 6, 2025
விழுப்புரம்: அரசு விருது பெற்ற பரையனந்தாங்கல்- 1 கோடி உதவி!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், பரையனந்தாங்கல் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி பணிகளுக்கான நிதியினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இன்று (டிச.06) வழங்கினார்.
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


