News April 28, 2025
IPL-இல் இனி 94 போட்டிகள்

2028 IPL தொடரில் இருந்து 94 லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் அருன் துமல் தெரிவித்துள்ளார். 8 IPL அணிகள் மட்டுமே இருந்தபோது, ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடின. ஆனால், 10 அணிகள் வந்தபின், இந்த முறை பின்பற்றப்படாமல் 70 போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இது நியாயமான நடைமுறை அல்ல என்று புகார் எழுந்ததால் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது.
Similar News
News November 27, 2025
SIR விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்க ஆட்சியரின் அவசர வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் கூட கனமழை காரணமாக இன்றும் நாளையும் இரு தினங்களை படிவங்களை வாக்குச்சாவடி முகவரிடம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
News November 27, 2025
டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறியது

TN முழுவதும் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் நவ.30-க்குள் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் அமலாகியுள்ளது. அதன்படி, QR CODE, கடை எண் ஒட்டப்பட்ட மதுபாட்டில் விநியோகம் செய்யப்படும். மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் கொடுத்து வாங்கிவிட்டு, அதே கடையில் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.
News November 27, 2025
கடலோர பகுதிகளுக்கு நாளை இரவு முக்கிய எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் உள்ள சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதன் எதிரொலியாக நாளை இரவு 8.30 – 11.30 மணி வரை, 2.7-3.3 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீனவர்களின் உபகரணங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


