News June 13, 2024

நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் கேள்வித்தாள் கசிந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும், நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த சவால், பிரச்னை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், நீட் தேர்வர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

Similar News

News September 6, 2025

செப்டம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1860 – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் ஆடம்ஸ் பிறந்தநாள்.
*1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாப்பிரிக்கா நாட்சி ஜெர்மனியுடன் போர் தொடுத்தது
*1965 – இந்தியா பாகிஸ்தானை தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
*1997 – டயானாவின் உடல் லண்டனில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை 250 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர்.

News September 6, 2025

ஸ்பான்சர்ஷிப் விலையை நிர்ணயித்த BCCI

image

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா அமலான நிலையில், Dream 11 உள்ளிட்ட ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை BCCI முறித்தது. இதனையடுத்து, புதிய ஸ்பான்சர்ஷிப்களை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், Bilateral போட்டிகளுக்கு ₹3.5 கோடி, ICC, ACC உள்ளிட்ட போட்டிகளுக்கு ₹1.5 கோடி என ஸ்பான்சர்ஷிப் இருப்பு விலையை BCCI நிர்ணயித்துள்ளது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடர் செப்.9-ல் தொடங்குகிறது.

News September 6, 2025

சோனியா காந்தி மீது வழக்கு பதிய கோரி மனு

image

காங்.,ன் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தேசிய அளவில் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், 1983-ல் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் பெயர், 1980-லேயே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, சோனியா காந்தி மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதன் மீதான விசாரணை, செப்.10-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!