News January 20, 2025

காணும் பொங்கலுக்கு விடுமுறை கூடாது

image

காணும் பொங்கல் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை குப்பை கூளமானது தொடர்பான வழக்கை NGT தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, விடுமுறையை ரத்து செய்தால் இதுபோன்ற பிரச்னை வராது என்று குறிப்பிட்டு, அதனை அரசுக்கு பரிந்துரையாக அளித்துள்ளது.

Similar News

News March 16, 2026

முகத்தை பளபளப்பாக்கும் பியூட்டி ஃபேஸ் மாஸ்க்!

image

சருமத்தைப் பாதுகாக்க தக்காளி மிகவும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கரும்புள்ளிகள், எண்ணெய் பசை உள்ளிட்ட பாதிப்புகளை குறைக்க தக்காளி பேஸ் பேக் உதவுமாம். அதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு 2 (அ) 3 முறை இந்த பேக்கை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்குமாம்.

News March 16, 2026

அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள்: அப்பாவு

image

அமித்ஷா சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமித்ஷாவும் புஸ்ஸி ஆனந்தும் நண்பர்கள் என்றும் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யுடன் பேரம் பேசுவதால்தான் இதுவரை NDA கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

News March 16, 2026

ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு: ஆதவ்

image

சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், இனி மக்களின் ஆதரவோடு ஒவ்வொரு ஊரிலும் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழும் என ஆதவ் ஆர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் அவதூறுகள் அனைத்தும் தோற்றுப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!