News December 30, 2024
ஐரோப்பா முழுவதும் இனி ஒரே Charger தான்!

Smartphone, Tablet உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு Type-C சார்ஜரை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. லேப்டாப்களுக்கு மட்டும் 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின் கழிவுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் இதை பின்பற்ற முன்வந்துள்ள நிலையில், ஆப்பிள் மட்டும் சிறிது தயக்கம் காட்டி வருகிறது.
Similar News
News August 14, 2025
தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
News August 14, 2025
உங்க ஊருக்கு அர்த்தம் தெரியுமா?

உங்க ஊர் என்ன? என்று கேட்டால், நாம் அருகிலுள்ள நகரம் (அ) மாவட்டத்தின் பெயரையே கூறுவோம். முகவரி எழுதும்போது மட்டுமே கிராமத்தின் பெயரை நினைவில்கொள்வோம். ஆனால், நாம் பிறந்த கிராமமோ (அ) டவுனோ தான் நமது அடையாளம். அவ்வாறான ஊர் பெயர்களில் உள்ள புரம், பட்டி, குளம், பாளையம் உள்ளிட்டவற்றின் அர்த்தங்கள் என்னவென்பதை மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். உங்கள் ஊர் என்னவென்பதை கமெண்ட் செய்யுங்கள்.
News August 14, 2025
65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை வெளியிட SC ஆணை

பிஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட ECI-க்கு SC உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 3 நாள்களுக்குள் டிஜிட்டல் வடிவில் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விவரங்களை வெளியிட முடியாது என ECI கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.