News April 12, 2025
CSK ரசிகர்களுக்கு இதை விட சோகம் வேறேதும் இல்லை..!

CSK அணி, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால், எந்த ஒரு IPL சீசனிலும் CSK தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றதில்லை. வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. ரசிகர்களுமே இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் தவித்து போய் இருக்கின்றனர். இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
Similar News
News December 11, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்.. கொந்தளித்த அமித்ஷா

ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது, அர்த்தமற்றது என அமித்ஷா கூறியுள்ளார். Parliment-ல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அமித்ஷா, யாரையோ திருப்திப்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக பேசியுள்ளார். மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சி கூட கையெழுத்திட்டுள்ளதாக அமித்ஷா சாடினார்.
News December 11, 2025
வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருக: திருமாவளவன்

பார்லிமெண்ட்டில் SIR பற்றிய விவாதத்தில் பேசிய திருமாவளவன், SIR-ஐ தேர்தலையொட்டி அவசர அவசரமாக நடத்தாமல், தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்த வேண்டும் என்றார். குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் ECI-க்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், அதிகார வரம்பை மீறி ECI செயல்படுவதாக சாடினார். EVM முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News December 11, 2025
ஒரு பெண்ணின் தலைவிதியை மாற்றிய பிஹார் இளைஞன்

பிஹாரில் திரைப்படத்தில் வருவதுபோல் ஒருவரது நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. ரயிலில் யாசகம் எடுத்துவந்த ஆதரவற்ற பெண்ணை பார்த்த இளைஞர், அதை கடந்துபோகாமல், அந்த பெண்ணின் குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுடன் அந்த பெண்ணை சேர்த்து வைத்துள்ளார். ஆனால், விதி வேறு விளையாட்டை விளையாடியது. இதனால், இருவரிடையேயும் காதல் மலர்ந்து, அது சமீபத்தில் திருமணமாக முடிந்தது. SHARE


