News October 27, 2024

தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் இல்லை..!

image

தீபாவளியை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இந்த நேரத்தில், டோல்கேட்டுகளில் பெருமளவில் நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் 29, 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தால், டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை தவிருங்கள் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. Share It.

Similar News

News July 9, 2025

எமோஜி அனுப்பினால் உறவுகள் மேம்படுகிறதா?

image

நவீன யுகத்தில் நேரடி உரையாடலை விட சமூக வலைதள சாட்டிங்தான் அதிகம். அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும், நெருக்கம் வலுப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக எமோஜி உள்ளதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கண்டறிந்துள்ளார். உங்களுக்கு எமோஜி பிடிக்குமா? ?

News July 9, 2025

மாடுகளுடன் மாநாடு! பணிகளை ஆய்வு செய்த சீமான்

image

ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் சொல்லப்படும் என்பது போல் <<16951728>>ஒரு மாநாட்டை<<>> சீமான் நடத்த உள்ளார். மதுரை விராதனூர் பகுதியில் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை போடப்பட்டு அதில் சீமான் பேச உள்ளார். இந்நிலையில் மைக்கில் பேசி மாடுகள் மிரளுகின்றதா என சீமான் நேரில் ஆய்வு செய்தார்.

News July 9, 2025

சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.

error: Content is protected !!