News October 9, 2025
உலகில் வேஸ்ட் என எதுவும் இல்லை: நிதின் கட்கரி

2027-க்குள் திடக்கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த உலகில் எதுவுமே வேஸ்ட் இல்லை எனவும், டெக்னாலஜி மற்றும் தலைமை பண்பால் அதை பயன்படும் பொருளாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், உலக ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 9, 2025
மேம்பாலத்திற்கு சாதிப் பெயர் ஏன்? சீமான்

கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது என்று பேசிய திமுக, ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளார்.
News October 9, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க TN திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி பரவியது. அதில், புதிய அப்டேட்டாக யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரிசி, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ₹5,000 கிடைக்கும் என்றும், அடையாளத்திற்காக கார்டு வைத்திருப்போருக்கு பணம் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி இதற்கான அறிவிப்பு வெளியாகுமாம். SHARE IT.
News October 9, 2025
இந்தியா வந்த தாலிபான் அமைச்சர்

ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முத்தகி இந்தியா வந்தடைந்தார். வரும் 16-ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருப்பார் எனவும், அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.