News October 25, 2025
அன்புமணி தரப்பு என ஒன்று இல்லை: ராமதாஸ்

இரு பிரிவுகளாக உள்ள பாமக இணைவதற்கான எந்த சாத்திய கூறுகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனிடையே பாமகவில் அன்புமணி தரப்பு என்று ஒன்று இல்லை என்றும், அது ஒரு கும்பல் மட்டுமே எனவும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சின்னம் எங்களுக்குதான் என சொல்பவர்களின் முகம் விரையில் தொங்கிவிடும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 25, 2025
இந்தியாவுடனான போரில் பாக்., தோற்கும்: Ex CIA

இந்தியா – பாக்., போரில் பாகிஸ்தானுக்கு எந்த பயனும் இல்லை என்று Ex CIA ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். ஏனென்றால் போரில் பாக்., தோற்கும் என்ற அவர், பாக்.,கின் அணு ஆயுத கிடங்குகளின் கட்டுப்பாடு USA-விடம் உள்ளதாக இந்தியாவிடம் அமெரிக்கா கூறியிருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாக்., மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சதிஷ் ஷா(74) இன்று காலமானார். கிட்னி தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மும்பையில் அவரது உயிர் பிரிந்தது. காமெடி ரோல்களில் கலக்கிய இவர், FANA, OM SHANTI OM, MAIN HOON NA என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் பழம்பெரும் <<18059439>>நடிகர் கோவர்தன் அஸ்ரானி<<>> மறைந்த நிலையில், சதீஷ் ஷாவும் உயிரிழந்தது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News October 25, 2025
ஆஸி., மகளிர் அணியினரிடம் அத்துமீறிய நபர் கைது

ODI உலகக் கோப்பையில் விளையாடி வரும் ஆஸி., மகளிர் அணியினர், இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். நேற்று 2 வீராங்கனைகள், ஹோட்டலிலிருந்து கஃபேவுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை பைக்கில் ஃபாலோ செய்து வந்த ஒருவர், வீராங்கனைகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், CCTV காட்சிகளின் அடிப்படையில் அக்யூல் கான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


