News December 24, 2024

திமுக கூட்டணியில் பிளவு இல்லை

image

திமுக கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள்தான் அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் வேல்முருகன் திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று பேசியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. திருமாவளவன் கூட ஆளுங்கட்சியின் மேல் அதிருப்தி இருப்பதாக கூறியிருந்தார்.

Similar News

News July 7, 2025

சர்வதேச அளவிலும் கெத்து காட்டும் MI, Super Kings

image

நடந்துமுடிந்த 2025 IPL சீசனில் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியடைந்தாலும் எலிமினேட்டர் சுற்றுக்கு MI தகுதி பெற்றது. அதேபோல், மேஜர் கிரிக்கெட் லீக்கிலும் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற MI நியூயார்க் அணி எலிமினேட்டருக்கு தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சூப்பர் கிங்ஸ் அணியும் IPL, MLC & SA20 லீக்குகளின் முதல் 3 சீசன்களிலும் <<16886368>>Playoff<<>>-க்கு தகுதி பெற்றது.

News July 7, 2025

இறங்குமுகத்தில் தங்கம் விலை!

image

ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது. கடந்த வாரம் சவரனுக்கு ₹1,520 அதிகரித்த நிலையில் இந்த வார தொடக்கமே <<16974093>>இறக்கத்துடன்<<>> ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை சரிந்து வருவதோடு, இந்திய பங்குச்சந்தைகளும் பெரிதாக மாற்றமின்றி நிலையாக இருப்பதே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,010-க்கும், சவரன் ₹72,080-க்கும் விற்பனையாகிறது.

News July 7, 2025

Cab டிரைவர்களே குறி.. சிக்கிய சீரியல் கில்லர்

image

லம்பா என்பவர் தனது சகாக்களுடன் வாடகை கார் ஒன்றை புக் செய்வார். கார் உத்தரகாண்டை நோக்கிச் செல்லும்போது, டிரைவரை கொலை செய்வார்கள். பின்னர், அந்த காரை நேபாளத்தில் விற்பார்கள். இதையே 24 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வந்தவர்களை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இதுவரை 4 கார் டிரைவர்களை இவ்வாறு கொலை செய்து காரை விற்று வந்துள்ளனர். ஆனால், இதில் ஒருவரது சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாம். உஷார்!

error: Content is protected !!