News November 23, 2024
துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதுமான அளவு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், துவரம் பருப்பு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். சரியான தகவலை தெரிந்துகொண்டு ராமதாஸ் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 19, 2025
வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை சரிபார்ப்பது எப்படி?

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை ECI வெளியிட உள்ளது. இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை நீங்கள் ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். ECI இணையதளமான <
News December 19, 2025
பாஜகவின் பி டீம் விஜய்யா? நயினார் நாகேந்திரன்

விஜய் பாஜகவின் ‘பி டீம்’ என்ற விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விஜய் பாஜகவின் பி டீம் என்ற வதந்தியை திமுக திட்டமிட்டு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டினார். விஜய் கட்சியில் இணையும் முன், செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார் என தெரிவித்த அவர், அதனால் விஜய் திமுகவின் ‘பி டீமா’ அல்லது பாஜகவின் ‘பி டீமா’ என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News December 19, 2025
டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி இன்று அகமதபாத்தில் நடைபெற உள்ளது. 2-1 என முன்னிலை வகிக்கும் இந்தியா இன்று வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம். கடந்த போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்தானதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தெ.ஆப்பிரிக்கா தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


