News January 19, 2025

இந்த ஆட்சியில் பெண் SI-க்கே பாதுகாப்பு இல்லை: EPS

image

மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தாண்டி, பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் தொடர்வதாக இபிஎஸ், திமுக அரசை விமர்சித்துள்ளார். தாம்பரத்தில் பெண் SI உள்ளிட்ட 8 பேரிடம் நகை பறிப்பு நடந்ததை சுட்டிக்காட்டி, இந்த நிலைக்கு நிர்வாகத் திறனற்ற திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். இதற்கு CM பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

Similar News

News March 12, 2026

TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

image

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News March 12, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்தது

image

<<19359319>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹150 குறைந்து ₹14,970-க்கும், சவரன் ₹1,19,760-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News March 12, 2026

TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

image

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!