News March 16, 2025
பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: மெக்வால்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2025
திருமணத்திற்கு முன் குழந்தை! தாய் பால் இல்லாமல் மரணம்

கோவை அரசு ஹாஸ்பிடலில் திருமணம் ஆகாத இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழந்தை பிறந்ததால், வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்த அப்பெண், ஹாஸ்பிடல் காவலாளியை அணுகியுள்ளார். அவர், தனக்கு தெரிந்த தம்பதிக்கு தத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் சம்மதித்து, அவரிடமே குழந்தையை கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அக்குழந்தை தாய்பால் இல்லாமல் உயிரிழந்துள்ளது.
News March 16, 2025
முறைகேடு விசாரணை உறவுக்காரர்கள் கையில்: விஜய்

<<15777897>>டாஸ்மாக் <<>>முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் (பாஜக), இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் (திமுக) மட்டுமே வெளிச்சம் என்று விஜய் விமர்சித்துள்ளார். முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற சூளுரையின் பின்னணி என சாடிய அவர், எத்தனை கோடிகளை கொட்டினாலும் திமுகவை 2026இல் மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றார்.
News March 16, 2025
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் (64) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் சில நாட்களாக அவதியடைந்து வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்ற இவரின் கனவில் உதிர்ந்த பூ உள்ளிட்ட சிறுகதைகள், திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானவை. எழுதுவது மட்டுமல்ல, சமூக களப்பணியிலும் முன்னணியில் இருப்பவர்.