News August 2, 2024
ராமர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை: சிவசங்கர்

ராமர் வாழ்ந்ததற்கு எந்தவித வரலாறோ, ஆதாரமோ இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூரில் நடந்த விழாவில் பேசிய அவர், “மாமன்னர் ராஜேந்திர சோழருக்கு 3,000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. அவரது ஆட்சியின் பொற்காலத்தை ஆதாரமாகக் கொண்டு, அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அவரை கொண்டாடவில்லை என்றால், வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் சிலர் கட்டிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.
Similar News
News October 25, 2025
வரலாற்றில் இன்று

*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்த நாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை தொடங்கப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
*1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்த நாள்.
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
News October 25, 2025
நெல் ஈரப்பதம்: தமிழகத்தில் மத்திய அரசு இன்று ஆய்வு

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17%-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக அதை 22%-ஆக குறைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அளவை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறது.
News October 25, 2025
காலையில் இதை குடித்தால் இவ்வளவு நன்மைகள் வரும்!

சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படும். ▶செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக இருக்கும் ▶உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம் ▶உங்கள் சருமம் இயற்கையான ஆரோக்கியத்தை பெறும்▶கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT


