News March 22, 2024
தனிநபர் கடனுக்கு செயலாக்கக் கட்டணம் இல்லை

₹20 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை (Processing Fee) எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. “பண்டிகை தமாக்கா” என்ற பெயரில் மார்ச் 31 வரை இந்த சலுகை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ள எஸ்பிஐ, குறைந்தபட்ச மாத வருமானம் ₹15,000 இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.
News October 23, 2025
BREAKING: முக்கிய அமைச்சரை தூக்குகிறாரா CM ஸ்டாலின்?

கனமழையால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் CM ஸ்டாலின், உதயநிதி சுழன்று சுழன்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்பதால், மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
News October 23, 2025
சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே? நயினார்

தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் அரசு ஹாஸ்பிடல்கள் அமைக்கப்படும் என சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தும் தாம்பரம் அரசு ஹாஸ்பிடலில் குடிநீர், கழிவறை வசதி கூட இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், மதுரவாயலில் செங்கலை கூட நாட்டவில்லை என்றும் சாடியுள்ளார்.