News April 19, 2024
கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் நேரம் கொடுக்க வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு முன்பு எத்தனை நபர்கள் வந்தாலும் வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதன்பின் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலை புறக்கணிக்காமல் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News February 14, 2026
நடிகை பத்மா காலமானார்.. உருக்கமான PHOTOS

சின்னத்திரை ரசிகர்களை தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய <<19105259>>நடிகை பத்மா(48)<<>>, இந்த பூவுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். இறுதி காலத்தில் புற்றுநோய்க்கு எதிராக போராடிய அவர், சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் வாடியது பெரும் சோகம். பத்மாவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ரசிகர்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். கடைசி போட்டோ உங்களை அழ வைக்கலாம்!
News February 14, 2026
குழந்தைகள் தானாகவே Home Work செய்யணுமா?

Home Work செய்யமாட்டேன் என உங்கள் பிள்ளைகள் அடம்பிடிக்கின்றனரா? அவர்களை வழிக்கு கொண்டு வர சில டெக்னிக்ஸ் உள்ளன. ➤Home Work செய்ய தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் ➤அவர்களுக்கு விருப்பமான இடத்தில் படிக்க அனுமதியளியுங்கள் ➤படிக்கும் முன் விளையாடட்டும் ➤Home work-ஐ செய்து முடித்தால் பாராட்டுங்கள் ➤குழந்தைகள் அழுது அடம்பிடித்தால், விட்டுப் பிடியுங்கள், அடிக்கவோ திட்டவோ வேண்டாம். SHARE.
News February 14, 2026
பண மழையில் நனையும் 4 ராசிகள்

சுக்கிரனும், சூரிய பகவானும் நேற்று(பிப்.13) இணைந்திருப்பதால், 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் இரட்டிப்பாகி நிதி நிலைமை மேம்படும். *மிதுனம்: எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைத்து வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உண்டாகும். *கன்னி: திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். *தனுசு: சேமிப்பு உயரும். பல வழிகளில் லாபம் பெருகும்.


