News December 4, 2024
அரசு ஊழியர்களுக்கு பறந்து வந்த ஷாக் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 8வது ஊதியக் குழு தொடர்பான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவுப்படுத்திவிட்டது. தற்போது உள்ள 7வது ஊதியக்குழுவுக்கு மாற்றாக 8வது ஊதியக் குழு 2025இல் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த பட்ஜெட்டிலும் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Similar News
News November 19, 2025
கோவைக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு!

கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போதிய மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
News November 19, 2025
மதிப்பு கூட்டும் மையங்கள்: ₹1.50 கோடி வரை மானியம்

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு ₹1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து , வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


