News February 17, 2025
வரவு-செலவு கணக்கு பார்க்கும் இடம் இல்லை: அஸ்வின்

கிரிக்கெட் விளையாடினால் பணம் வருமென நினைக்காமல், மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்க வேண்டும் என இந்திய அணி Ex வீரர் அஸ்வின் கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “கிரிக்கெட் என்பது வரவு-செலவு கணக்கு பார்க்கும் இடமில்லை. அப்படி யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்” என்றார். மேலும், கிரிக்கெட்டில் யாரும் அரசியல் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
News March 3, 2026
கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?
News March 3, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

மூத்த காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.பி. உன்னிகிருஷ்ணன் (90) காலமானார். கோழிக்கோடு வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை (1971-1996) MP-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் (1989-90) மத்திய தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றினார். வளைகுடா போரின்போது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியவர்.


