News August 30, 2025
ஸ்டாலினுக்கு இடமில்லை.. வெளியான கருத்துகணிப்பு

நாட்டில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் குறித்து India Today-C Voter நடத்திய சர்வேயில் CM ஸ்டாலின் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. இதில், அசாம் மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மா முதலிடத்திலும், UP CM யோகி 5-வது, AP CM சந்திரபாபு நாயுடு 7-வது, WB CM மம்தா பானர்ஜி 9-வது இடத்திலும் உள்ளனர். அதேநேரம், தேசிய அளவில் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் CM ஸ்டாலின் 5-வது இடத்தில் உள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 30, 2025
சசிகாந்த் செந்தில் MP ஹாஸ்பிடலில் அனுமதி

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் MP சசிகாந்த் செந்தில் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் அவர் நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததால் திருவள்ளூர் அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
News August 30, 2025
நயன்தாராவுடன் இருப்பது யார் தெரியுமா?

நடிகை நயன்தாராவிற்கு உடன்பிறந்த அண்ணன் இருப்பது தெரியுமா? ஆம், கேரளாவின் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன், இவரது அண்ணன் பெயர் லெனோ குரியன். துபாயில் தொழில் செய்து வரும் லெனோ, சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
News August 30, 2025
முன்னணி வீரர்களுக்கு ஃபிட்னஸ் டெஸ்ட்

ஆசிய கோப்பை தொடருக்கு முன்பான ஃபிட்னஸ் சோதனைக்காக பெங்களூருவில் உள்ள BCCI சிறப்பு மையத்திற்கு இந்திய வீரர்கள் படையெடுத்துள்ளனர். ரோஹித், கில், பும்ரா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் இந்த டெஸ்ட்டில் பங்கேற்க உள்ளனர். இதில் ரோஹித் ஷர்மா ஆசிய கோப்பைக்கான அணியில் இல்லை என்றாலும், வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடருக்கு தயாராகும் பொருட்டு வருகை தந்துள்ளார்.