News March 20, 2024
ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க வேறு வழியில்லை

ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது அவசியமென பைடனிடம் தெளிவுப்படுத்தி விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு, அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லையென நெதன்யாகு கைவிரித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
மதுரோவின் கைதின் போது 52 ராணுவ வீரர்கள் பலி

ஹாலிவுட் படத்தின் அதிரடி காட்சி போல் வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்தனர். இதில் 55 வெனிசுலா மற்றும் க்யூபா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 வெனிசுலா வீரர்களும், 32 க்யூபா வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இருநாடுகளும் தனித்தனியாக அறிவித்துள்ளன. முதலில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பின் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவில் தரையிறங்கியுள்ளன.
News January 7, 2026
கபில் தேவ் பொன்மொழிகள்

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள். * நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. *உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
News January 7, 2026
மோடி என் மீது அதிருப்தியில் உள்ளார்: டிரம்ப்

தனக்கு மோடியுடன் நல்ல உறவு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியாவுக்கு அதிக வரிகளை விதித்ததால் மோடி தன் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரியை விதித்தது குறிப்பிடதக்கது.


