News May 17, 2024
ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் வேண்டும்; ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பிஹாரில் பேசிய அவர், “INDIA கூட்டணி எப்படியும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். மம்தா, ஸ்டாலின், கெஜ்ரிவால் இவர்களில் யார் பிரதமர்? அவர்கள் பிரதமர் பதவியை ஆண்டுக்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்” என்றார்.
Similar News
News January 6, 2026
திருவாரூர்: பணி உயர்வு வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

திருவாரூரில் ஸ்ரீ வாஞ்சிநாதர் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், பணி உயர்வு, திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 6, 2026
விஜய்க்கு சீமான் ஆதரவு

விஜய்யின் ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது அவசியமற்றது என சீமான் தெரிவித்துள்ளார். ஜனநாயகனின் தெலுங்கு பதிப்பை( பகவந்த் கேசரி) தான் பார்த்ததாகவும், அதில் சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். A உள்ளிட்ட எந்த வகை சான்றிதழாக இருந்தாலும் அதை கொடுத்துவிடலாம் என்றும் எதற்காக தாமதப்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 6, 2026
BREAKING: நடிகர் SJ சூர்யா விபத்தில் சிக்கினார்

‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகரும் இயக்குநருமான SJ சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக் காட்சியின்போது இரும்புக் கம்பியில் மோதி அவரது காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, SJ சூர்யா 15 நாள்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


