News September 24, 2025
பாஜகவில் கோஷ்டி பூசல் இல்லை: வானதி சீனிவாசன்

திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உண்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை என கூறிய அவர், அண்ணாமலை கூட்டணியை பலப்படுத்தும் முயற்சிகளையே செய்து வருவதாகவும் விளக்கினார். கடந்த காலங்களில் GST வருவாய் அதிகரித்ததால்தான் ₹12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
Similar News
News September 24, 2025
நாடு முழுவதும் எதிரொலித்த விலை குறைப்பு

GST வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் செப்.22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி 32,000 கார்களையும், ஹூண்டாய் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்குவதால், இன்னும் பைக், கார்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News September 24, 2025
ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டில் வராது: சுப்ரீம் கோர்ட்

ஐகோர்ட்கள் தங்களது கட்டுப்பாட்டில் வராது என SC தெரிவித்துள்ளது. தன் மீது 13 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உ.பி.யை சேர்ந்த ஒருவர் SC-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், பாதி அளவு எண்ணிக்கையில் நீதிபதிகளை வைத்து ஐகோர்ட்கள் செயல்படுவதாகவும், எனவே அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
News September 24, 2025
இந்தியாவை எந்த அணியாலும் வெல்ல முடியும்: BAN கோச்

இந்திய அணியை வெற்றி கொள்ளும் திறன் அனைத்து அணிகளுக்கும் உள்ளதாக வங்கதேச பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். போட்டி அன்று களத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணியே வெல்லும் எனவும், கடந்த கால நிகழ்வுகள் வெற்றியை தீர்மானிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வங்கதேசத்தின் பந்துவீச்சு திறன் தற்போது வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.