News April 12, 2024

மோடி அலைக்கு முடிவே இல்லை

image

மோடி அலை இந்தியாவில் ஓயாது என கர்நாடக பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் மட்டுமே அவரை எதிர்ப்பதாக கூறிய அவர், நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். கர்நாடக முதல்வராக அவர் 2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

ஷிண்டே தரப்பு MLA-வை கண்டித்த CM பட்னாவிஸ்

image

ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா MLA <<17002259>>சஞ்சய் கெய்க்வாட்டின் செயலுக்கு <<>>CM தேவேந்திர பட்னவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். MLA விடுதியில் கெட்டுப்போன உணவு கொடுத்ததாக கூறி ஊழியரை சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ வைரலானது. இந்நிலையில் சஞ்சையின் செயல்பாட்டுக்கு CM பட்னாவிஸ் சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News July 9, 2025

நடிகர் பிஸ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

image

நடிகர் பிஸ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை.. ஷாக்

image

மகாராஷ்டிர மாநிலம், சாகாபூர் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை நடத்திய சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத்ரூமில் ரத்தம் சிதறி இருக்கவே, மாதாந்திர பீரியட்தான் இதற்கு காரணம் என கருதி தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் மாணவிகளிடம் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடவே, இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

error: Content is protected !!