News March 29, 2024
தேர்தல் பத்திரம் ஊழல் கிடையாது

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார். மேலும், தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளதாக கூறிய அவர், பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்துப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
Similar News
News August 14, 2025
அமைச்சரா? உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா? இபிஎஸ்

தமிழகத்தில் 207 அரசுப்பள்ளிகளை மூடுவது திமுகவினரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள், தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்கான நடவடிக்கை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இப்பள்ளிகளை மூடுவதன் மூலம் அது இயங்கிய இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல் செயல்படுவது வெட்கக்கேடானது என்றார்.
News August 14, 2025
சபாநாயகர் அப்பாவு காரை சுற்றிவளைத்த பெண்கள்

நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முருகேசபுரத்தில் ₹423 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்க சபாநாயகர் அப்பாவு சென்றுள்ளார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த பெண்கள் 40% கூட முடிவடையாத இத்திட்டத்துக்கு விளம்பர தேடி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் திசையின்விளை பகுதியை அப்பாவு பாரப்பட்சமாக புறக்கணிப்பதாகவும், போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.
News August 14, 2025
வைரமுத்து மீது நடவடிக்கை தேவை: அர்ஜுன் சம்பத்

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமனை பைத்தியக்காரன் என வைரமுத்து இழிவுப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி கிறிஸ்துவர் என்றும், ஆளுநரை உள்நோக்கத்துடன் அவர் அவமதித்துள்ளதால் அவரது பட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.