News May 17, 2024
இந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை

இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூறியுள்ளது.
Similar News
News November 8, 2025
ONGC-ல் வேலை… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் 2,623 அப்ரென்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.6-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நவ.17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 18-24 வயதிற்கு உட்பட்டவர்கள் ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 8, 2025
2026 தேர்தலில் SIR தான் ஹீரோ: கடம்பூர் ராஜூ

2026 தேர்தலில் SIR தான் ஹீரோ ஆக இருக்கும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 12,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அதனால் தான் SIR என்றாலே திமுகவுக்கு பயம், நடுக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். SIR சிறப்பாக நடைபெற்று தகுதியானவர்கள் வாக்களிக்கும் போதும், கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று EPS முதல்வராக வருவார் என்றும், கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
News November 8, 2025
நவம்பர் 8: வரலாற்றில் இன்று

*1680–தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்தநாள். *1910–தவில் கலைஞர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை பிறந்தநாள். *1927–மூத்த அரசியல்வாதி அத்வானி பிறந்தநாள் *1947–பாடகி உஷா உதுப் பிறந்தநாள். *1966–அரசியல்வாதி சீமான் பிறந்தநாள். *1987–எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமி மறைந்த நாள். *1989–நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள். *2006–அரசியல்வாதி கா.காளிமுத்து மறைந்த நாள். *2016–PM மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த நாள்.


