News September 25, 2024

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமா

image

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக கூட்டணியில் விரிசலா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணியில் விரிசலோ, சலசலப்பாே இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை என்று கூறினார். எக்ஸ் பக்க வீடியோவை விவாதத்துக்கு பலரும் எடுத்து கொண்டதாகவும், அந்த வீடியாேவால் கூட்டணிக்கு சிக்கல் இல்லை என்றும் தெரிவித்தார்.

Similar News

News August 24, 2025

தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்

image

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.26-ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு, திமுக MP வில்சன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 24, 2025

என்னை மிரட்டிய பவுலர் யார்? ருதுராஜ் கெய்வாட் பதில்

image

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டிரெண்ட் போல்ட் என பதிலளித்துள்ளார்.

News August 24, 2025

உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

image

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!