News April 23, 2025
தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
கிறங்கடிக்கும் அழகில் பாக்யஸ்ரீ போர்ஸ்

சித்திர அழகாக வலம் வரும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவரது சுட்டும் விழி பார்வையால், நேரம் விடியாத காலையாகவும், முடியாத மாலையாகவும் நீடிக்கிறது. மின்னலோ, கனியோ, கவியோ, அமுதோ, சிலையழகோ என எதை குறிப்பிட்டு அழகை ரசிப்பது என்று தெரியவில்லை. உங்களுக்கும் இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 3, மார்கழி 19 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11.30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News January 3, 2026
Water Purifier விலை குறைகிறதா?

GST கவுன்சில் கூட்டம் அடுத்த 15 நாள்களில் கூட உள்ளது. அதில், காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பான்கள் மீதான GST-ஐ 18% to 5% ஆக குறைக்கவும், அதை அத்தியாவசிய பொருள்களாக வகைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவது மத்திய அரசின் கடமை என அம்மாநில ஐகோர்ட் கூறியிருந்தது.


