News November 19, 2024
‘IRCTC உணவுப்பட்டியலில் சிக்கன் ரைஸ் கிடையாது’

கோவையைச் சேர்ந்த மாணவி எலினா, ரயில் பயணத்தின் போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாக நேற்று செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம் மாணவி சாப்பிட்டதாகக் கூறப்படும் சிக்கன் ரைஸ் IRCTC விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் இல்லை. மாணவியை ஹாஸ்பிட்டலில் அனுமதிக்க பால்ஹர்ஷா ரயில் நிலையத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர் ஆனால் அவர் தொடர்ந்து பயணித்தார் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News March 15, 2026
விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவுக்கு வாழ்த்து.. ரஜினி, கமலை சாடிய சின்மயி

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்கு கமல் & ரஜினி வாழ்த்து கூறியிருந்தனர். இந்நிலையில், கமலின் பதிவை டேக் செய்த சின்மயி, சினிமாவில் செல்வாக்குடன் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது பாலியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டோம் என தெரிவிக்கும் பெண்களை கண்டும் காணாமல் புறக்கணிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ‘அய்யோ புரியவே புரியாதா?’ என ரஜினிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.