News April 18, 2024
வாக்கு எந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு வாக்கிற்கு 2 வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
Similar News
News February 8, 2026
லெட்டர் பேடு கட்சியும் நாமும் ஒன்னா? தவாக

இம்முறையும் ஒரு சீட்டை ஏற்க முடியாது என தவாக நிர்வாகிகள் வேல்முருகனிடம் கொந்தளித்துள்ளனராம். லெட்டர் பேட் கட்சியும், 15 ஆண்டுகளாக உள்ள நாமும் ஒன்றா என்றும் அவர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, 3 MLA + 1 ராஜ்யசபா (அ) உள்ளாட்சி தேர்தலில் மேயர் + 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என வேல்முருகனிடம் முறையிட்டுள்ளனராம். தவாகவின் கோரிக்கையை நிறைவேற்றுமா திமுக?
News February 8, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரு வாரத்தில் குறைந்தது

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
News February 8, 2026
லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்..

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்யும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் – இவை 2 மகள்களுடன் தற்கொலை செய்த பெண்ணின் கடைசி வரிகள். பல்லாயிரம் கனவுகளுடன் காதல் திருமணம் செய்த பத்மாவை, கணவரின் வேலையில்லா திண்டாட்டமும், கடன் தொல்லையும் இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ஆந்திராவின் புத்தூர் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


