News March 16, 2024
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை

தமிழகத்தில் விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அது தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக அச்சடிக்கப்பட்ட செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: செல்வம் செழிக்க இங்கு போங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் சொக்கநாதர் கோயில் கள்ளக்குறிச்சி நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் வழிபடுவதின் வழியே தீராத பல நோய்கள் தீர்ந்து உடல்நலம் சீராகும் என்பது நம்பிக்கை. மேலும் செல்வம் பெருகுவதாக ஐதீகம். ஷேர்.
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 23, 2025
கள்ளக்குறிச்சி: 10லட்சம் மதிப்பில் கஞ்சா பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரையும் அதே மாடூர் கிராமத்தைச் சார்ந்த ரஞ்சித் என்பவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.