News April 16, 2024

திமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை இல்லை

image

ஊழலை ஒழிக்க, ஊழல்வாதிகளை அழிக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும் என ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் பிரசாரம் செய்த அவர், ஊழல்வாதிகள் அனைவரும் INDIA கூட்டணியில் உள்ளதாக விமர்சித்தார். ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் திமுக ஆட்சியால், தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

Similar News

News January 21, 2026

வங்கிக் கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

image

PM KISAN திட்டத்தின் அடுத்த தவணையை (₹2,000) தமிழக விவசாயிகள் பெற தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகி அடையாள எண்ணை பெறுமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், e-KYC அப்டேட்டையும் விவசாயிகள் நிறைவு செய்வது அவசியமாகும். அடுத்த மாதம் தொகையை விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. SHARE.

News January 21, 2026

BREAKING: இந்தியா பேட்டிங்

image

நாக்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20-ல் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் 11: சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார், ரிங்கு சிங், ஹர்திக், துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. இந்த தொடரில் IND வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில், டி20 WC-க்கான பிளேயிங் 11-ஐ அணி நிர்வாகம் இறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 21, 2026

WhatsApp-ல் வரும் புது அசத்தல் அப்டேட்!

image

WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்க உள்ளது. மொபைல் WhatsApp-ல் செய்த ஆடியோ & வீடியோ அழைப்புகளை இனி WhatsApp Web மூலமும் மேற்கொள்ளலாம். Group Call மூலம், 32 பேருடன் ஒரே நேரத்தில் பேச முடியுமாம். இதற்காக, WhatsApp-ஐ கம்ப்யூட்டரில் Install செய்ய தேவையில்லை என்றும் Web Browser-லியே பயன்படுத்த எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!