News September 24, 2024

சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை

image

மூடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். இதை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Similar News

News August 9, 2025

4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு இலவச பட்டா: CM

image

சென்னை, தாம்பரத்தில் 20,021 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை CM ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 17,74,561 குடும்பத்தின் வீட்டுமனை பட்டா கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை நோக்கி TN வளர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ‘திராவிட மாடல் 2.0’ அரசு தொடரும் என்றும் சூளுரைத்தார்.

News August 9, 2025

ராமதாஸுக்காக காத்திருக்கும் நாற்காலி

image

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு தொடங்கியுள்ளது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் ராமதாஸ் வரவில்லை. ஆனால், பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்காக தனியாக ஒரு நாற்காலி போடப்பட்டுள்ளது. பாமக வரலாற்றில் ராமதாஸ் இன்றி நடக்கும் முதல் பொதுக்குழு இதுவாகும். இதில், அன்புமணியே தலைவர், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

News August 9, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪தாம்பரத்தில் <<17350203>>புதிய <<>>GH-யை திறந்து வைத்த CM ஸ்டாலின்
✪எம்ஜிஆரை <<17349030>>விமர்சித்த <<>>திருமாவளவன்
✪தங்கம் <<17348877>>விலை <<>>சரிவு.. சவரனுக்கு ₹200 குறைவு
✪எல்லையில் <<17348912>>மீண்டும் <<>>மோதல்.. 2 வீரர்கள் மரணம்
✪புதிய <<17347827>>வரிவிதிப்புகளால் <<>>கோடி கோடியாக பணம்: டிரம்ப் ✪CSK-ல் <<17341504>>இருந்து <<>>விலகும் அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி

error: Content is protected !!