News March 25, 2024

தேர்தல் ஆணையத்தை அணுக தடை இல்லை

image

இரட்டை இலை சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்புக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறிய ஐகோர்ட், தேர்தல் ஆணையத்தை நாடுவதற்கும் தடை இல்லை எனத் தெரிவித்தது. இதனால், தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டியுள்ளது.

Similar News

News December 25, 2025

காஞ்சிபுரம்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.( SHARE IT )

News December 25, 2025

வரும் நாள்களில் வெள்ளியின் விலை இதுதான்!

image

வெள்ளி விலை நேற்று(டிச.24) ஒரே நாளில் ₹10,000, இன்று(டிச.25) ₹1,000 என உயர்ந்து ₹2,45,000-ஐ தொட்டுள்ளது. தற்போது தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதன் விலை எகிறி வருகிறது. அதன்படி, வரும் நாள்களில் வெள்ளி கிராமுக்கு ₹300, கிலோவுக்கு ₹3 லட்சம் வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். எனவே வெள்ளியிலும் சிறு முதலீடுகளை செய்யலாம் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News December 25, 2025

சற்றுமுன்: பிரபல நடிகை கொலை.. காதலன் கைது

image

‘தி லயன் கிங்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இமானி ஸ்மித்(25) தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக கூறி காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரை சற்றுமுன் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை இமானிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!