News September 1, 2025
‘கூலி’ படத்தில் AI இருக்கு : லோகேஷ்

‘கூலி’ படத்தில் AI பயன்படுத்தியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிக்கு டீ-ஏஜிங் செய்ததாகவும், அவருடைய குரலை AI மூலம் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார். தனக்கு AI பயன்படுத்தி பணி செய்வது பிடித்திருப்பதாகவும், அது உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார். AI பயன்பாடுக்கு தான் எதிரான நபரும் அல்ல, ஆதரவான நபரும் எல்ல என்று லோகேஷ் பேசினார்.
Similar News
News September 4, 2025
தோனி IPL-ல் இருந்து ஓய்வா? வைரல் செய்தி!

கடந்த சில வருடங்களாகவே, தோனி எப்போது IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே பெரும் விவாத பொருளாக உள்ளது. 2025 சீசனில் பாதியில் இருந்து அணிக்கு கேப்டனான அவர், 2026 சீசனுக்கு முன்பாக ஓய்வு பெற்று விடுவார் எனப்பட்டது. ஆனால், 2026 சீசனிலும் கேப்டனாக விளையாடுவார் என்ற செய்தி சோஷியல் மீடியாவை ஆக்ரமித்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற போதிலும், ரசிகர்கள் இப்போதே குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News September 4, 2025
சீனாவை தொடர்ந்து சிங்கப்பூருடன் அதிக நெருக்கம்!

டெல்லியில் சிங்கப்பூர் PM லாரன்ஸ் வாங் உடன் PM மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய PM மோடி, பஹல்காம் தாக்குதல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கு சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.
News September 4, 2025
+2 பொதுத்தேர்வில் மாற்றம்.. தமிழக அரசு அறிவிப்பு

10 KM தூரத்திற்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே சென்டர் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. Exam சென்டருக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த முடிவால் பல லட்சம் பள்ளி மாணவர்கள் பலனடைவர்.