News August 17, 2025

துப்பாக்கி 2 கதை இருக்கு: AR முருகதாஸ்

image

தனது படங்களில், ‘துப்பாக்கி’ படத்தின் பார்ட் 2-வை மட்டுமே எடுக்க முடியும் என AR முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், அப்படத்தில் விஜய் ஆர்மிக்கு மீண்டும் செல்வார், அப்போது அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் (அ) இங்கு மீண்டும் வந்து வேறு ஒரு சம்பவத்தைக் கொண்டு கதையைத் தொடரலாம் என்றார். துப்பாக்கி 2 ஓகே ஆகுமா?

Similar News

News August 17, 2025

அதிமுகவால் பாஜகவை விட முடியாது: மைத்ரேயன்

image

பாஜகவை மீண்டும் கழட்டி விட்டுவிட்டு தவெகவுடன் அதிமுக இணையலாம் என்ற தகவல் அரசியல் அரங்கில் உலாவுகிறது. ஆனால் அப்படி நிச்சயமாக நடக்காது, அதற்கு BJP-யும் அனுமதிக்காது என்கிறார் மைத்ரேயன். சமீபத்திய பேட்டி ஒன்றில், அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தல் மிகப்பெரிய தோல்வியை தரும் என்றார். ADMK-விலிருந்து பலரும் வெளியேறக் காரணம், சரியான தலைமை இல்லாததே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News August 17, 2025

ஊழலில் திமுகவுக்கு தேசிய விருது: EPS

image

எல்லாவற்றிலும் கமிஷன் கிடைப்பதால், விலைவாசி உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை என EPS விமர்சித்துள்ளார். வந்தவாசியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய விருது கொடுக்கலாம் என சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும் என்றார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது எனக் கூறினார்.

News August 17, 2025

51-வது வயதில் பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்?

image

நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

error: Content is protected !!