News July 5, 2025

மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: சிராஜ்

image

பும்ரா இல்லாததால் பவுலிங்கில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளதாக சிராஜ் தெரிவித்துள்ளார். இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகளை அவர் அதிரடியாக வீழ்த்தினார். இதனையடுத்து பேசிய அவர், ஆகாஷ் தீப் & பிரசித் ஆகியோர் ஒருசில டெஸ்ட்டில் மட்டுமே விளையாடியுள்ளதால், பவுலிங்கில் பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இப்படியான பொறுப்புகள் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News July 5, 2025

கூட்டணி அமைச்சரவைதான்: டிடிவி உறுதி

image

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே கூட்டணி அமைச்சரவைதான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் சேர்ந்துதான் முடிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆட்சி கிடையாது என தெரிவித்து வரும் நிலையில் அதே கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

பெஞ்சமின் ரோலில் சிம்பு? எப்படி இருந்திருக்கும்?

image

‘Eleven’ படத்தின் கதையை சிம்புவுக்காக எழுதியதாக அதன் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். STR உடன் இணைந்து பணியாற்றவும் அவர் விருப்பம் தெரிவித்தார். சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியான ‘லெவன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெஞ்சமின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.

News July 5, 2025

மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான்

image

வனப்பகுதியில் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி, ஆக.3-ல் தான் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஜூலை 10-ல் ஆடு, மாடுகளின் மாநாட்டை மதுரையில் நாதக நடத்தவுள்ளது. முன்னதாக, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார் சீமான். தொடர்ந்து ‘மரங்களோடு பேசுவோம்; மரங்களோடு வாழ்வோம்’ என்ற மரங்களின் மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேறு என்ன மாநாடு நடத்தலாம்?

error: Content is protected !!