News October 1, 2025
கரூர் விவகாரத்தில் சதி உள்ளது: அதிமுக MP இன்பதுரை

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சதி உள்ளதாகவும், அரசின் தவறே மக்கள் உயிரிழக்க காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் சாபக்கேடு தற்போது டிஜிபியே இல்லாதது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 1, 2025
BREAKING: கரூர் துயரம்.. தவெக தலைவர்களுக்கு ‘செக்’

கரூர் துயர சம்பவத்தையொட்டி, தவெகவின் முக்கியத் தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, விஜய்யின் பரப்புரை வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை வழங்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உதவியாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
News October 1, 2025
இந்த வார OTT ரிலீஸ்

*அமேசான் ப்ரைம்: மதராஸி (அக்.1), டவுன்டன் அபே: தி கிராண்ட் ஃபினாலே (ஆங்கிலம்) (அக்.1), காட் ஸ்டீலிங் (அக்.1)
*ஈடிவிள்: லிட்டில் ஹார்ட்ஸ்(தெலுங்கு, அக்.1).
*சன் நெக்ஸ்ட்: சாகசம் (மலையாளம், அக்.1)
*நெட்பிளிக்ஸ்: தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் (அக்.2), மிஸ்ஸிங் கிங், நைட்மேர்ஸ் ஆஃப் நேச்சர்
*நம்ம ஃபிளிக்ஸ்: ஜூனியர் (கன்னடம்)
News October 1, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்