News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.
Similar News
News February 24, 2025
விமர்சித்தால் கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் முன்னணி தலைவர்களை கட்சியினர் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 24, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
News February 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 188
▶குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
▶பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.