News April 9, 2025
SBI ஏடிஎம்களில் இவர்களுக்கு கட்டணமில்லை.. இலவசம்

SBI வங்கி ஏடிஎம் கட்டண விதிகளை பிப்.1 முதல் மாற்றியமைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த விதியின்படி, SBI ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் 5 முறை SBI ஏடிஎம்களிலும், 10 முறை பிற ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். அதேநேரத்தில் சேமிப்பு கணக்கில் சராசரியாக ரூ.1 லட்சம் வைத்திருப்போருக்கு SBI மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் பரிவர்த்தனை அன்லிமிடெட் இலவசமாகும். கட்டணம் வசூலிக்கப்படாது. SHARE IT
Similar News
News December 1, 2025
கோவை: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 1, 2025
₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
News December 1, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஒரு கிராம் ₹12 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,070-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹96,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.


