News May 6, 2024

இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன

image

முதலீட்டாளர்களின் குருவாக கருதப்படும் வாரன் பஃபெட், இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அங்கு முதலீடு செய்வது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

Similar News

News March 18, 2026

‘தவெகவுடன் கூட்டணி இல்லை’ -கே.பி.முனுசாமி திட்டவட்டம்

image

கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தியே என மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடப்பதாகவும், தவெக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்பதால் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

News March 18, 2026

எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

image

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.

News March 18, 2026

கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

image

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!