News August 25, 2024
வேற்றுகிரகவாசிகள் உள்ளனர்: பகீர் கிளப்பும் இஸ்ரோ தலைவர்

பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) இருப்பதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஏலியன்ஸ் உள்ளனவா? என ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ் நிச்சயம் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். ஏலியன்ஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
Similar News
News November 20, 2025
பழைய காலத்து பெருமை பேசக்கூடாது: கி.வீரமணி

அகில இந்திய கட்சி என பழைய காலத்து பெருமை எல்லாம் இப்போது பேசக்கூடாது என்று கி.வீரமணி கூறியுள்ளார். இன்றைய யதார்த்தம் மாநிலக் கட்சிகளை சார்ந்துதான் உள்ளது என்ற அவர், ராகுல் காந்தி பிஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாலும், அம்மாநில காங்., நிர்வாகிகள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் சாடியுள்ளார். கி.வீரமணியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க.
News November 20, 2025
கனமழை: நாளை இங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதலே மழை பெய்யக்கூடும் என்பதால், நாளை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News November 19, 2025
12 பேரை திருமணம் செய்த பெண் (PHOTO)

போலீஸ் அதிகாரி உள்பட 12 பேரை திருமணம் செய்து ₹8 கோடி சுருட்டிய பெண் போலீசில் சிக்கியுள்ளார். உ.பி., கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி செளத்ரி(30) ஆசிரியை என்ற போர்வையில் உலா வந்துள்ளார். Bank மேனேஜர்கள் 3 பேரை திருமணம் செய்துவிட்டு சிக்கியபோது, சில போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகியுள்ளார். முன்பின் தெரியாத இதுபோன்ற பெண்களிடம் ஆண்கள் உஷாராக இருப்பது நல்லது என போலீசார் எச்சரிக்கின்றனர். உஷார்..!


